search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பெயின் அணி"

    உலககோப்பை மகளிர் ஆக்கி போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியது. #WomenHockeyWorldCup
    லண்டன்:

    14-வது உலககோப்பை மகளிர் ஆக்கிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 54-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்தது.

    ஆஸ்திரேலியா- அர்ஜென்டினா மோதிய கால்இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. பெனால்டி ஷூட்டில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் கால்இறுதியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு முன்னேறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைசியாக நடைபெறும் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து- போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomenHockeyWorldCup
    ஸ்பெயின் அணியின் தோல்வி எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ஹியரோ பதவி விலகியுள்ளார். #fernandohierro #spain #worldcup2018
    மாட்ரிட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகு இருந்தார். ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கியது. உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த சலசலப்பு அரங்கேறியது. உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.

    உலக கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2-வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்ந்து மூட்டையை கட்டியது. இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து 50 வயதான பெர்னாண்டோ ஹியரோ நேற்று விலகினார். ஏற்கனவே கவனித்து வந்த ஸ்போர்ட்டிங் இயக்குனர் பதவிக்கு திரும்பமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. #fernandohierro #spain #worldcup2018
    ×